Friday, June 18, 2010

திடுக்கிடும் தமன்னா!


ஒதுங்கறதுக்கே நிழல் இல்லையாம். இதுல உறங்கறதுக்கு ஏ.சி கேட்குதாம்! ஒரு கோடி கேட்கிற தமன்னாவை பார்த்துதான் இப்படி உச் கொட்டி சிரிக்குது கோடம்பாக்கம்.

த்ரிஷா, நயன்தாரா, அசின் மூணு பேரும் வேற மொழி படங்களில் நடிக்க போனதன் விளைவு தமன்னா மார்க்கெட்டில் நல்ல பண மழை. முன்னணி ஹீரோக்களும் வேற வழியில்லாம வெள்ளை மச்சத்தில் மயங்கினார்கள். ஆனால் அது ஒரு கனாக்காலம்னு சொல்ற நிலையை சீக்கிரமே எட்டப் போகிறார் தமன்னா என்கிறது சினிஜோதிடம்.

விஜய், சூர்யா, தனுஷ் என்று றெக்கை கட்டி பறந்த தமன்னாவுக்கு அப்படியே அஜீத் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதும் கொள்ளாத ஆசை. அதை சில பேட்டிகளிலும் தெரிவித்திருந்தார். ஆனால் தல தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கப் போவது தெலுங்கு நடிகை சமந்தா என்கிறார்கள். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தவர்தான் இந்த சமந்தா. இந்த செய்தியை கேட்டதிலிருந்தே அப்செட்டில் இருக்கிறாராம் தமன்னா.

அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமந்தா, மீண்டும் தமிழில் த்ரிஷா, அசின் என்று, தான் குறி வைத்திருந்த இடமெல்லாம் ஃபுல்லாகி வருவதால் 'ஃபுல் வருத்தத்தில்' இருக்கிறாராம் தமன்னா. இந்த சரிவை கணக்கிலேயே கொள்ளாமல் சம்பளம் ஒரு கோடி என்று பல்லிளிக்கிறாராம் அவரது மேனேஜர். ஒண்ணு மேனேஜரை மாத்துங்க. இல்ல சம்பளத்தை மாத்துங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்கள் தமன்சுக்கு!

0 comments:

Post a Comment

Tamannaah Actress © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates